/உள்ளூர் செய்திகள்/சென்னை/பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: மைதானத்தில் 70 இடங்களில் ஏ.ஐ., கேமராபிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: மைதானத்தில் 70 இடங்களில் ஏ.ஐ., கேமரா
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: மைதானத்தில் 70 இடங்களில் ஏ.ஐ., கேமரா
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: மைதானத்தில் 70 இடங்களில் ஏ.ஐ., கேமரா
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: மைதானத்தில் 70 இடங்களில் ஏ.ஐ., கேமரா
ADDED : மார் 23, 2025 12:36 AM

சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்., போட்டிகள், மார்ச், 23, 28, ஏப்., 5, 11, 25, 30 மற்றும் மே 12ம் தேதிகளில் நடைபெற உள்ளன.
போட்டிகளை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வருகை தர உள்ளதால், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், 'சென்னை சிங்கம் ஐ.பி.எல்., க்யூ.ஆர்., கோடு' என்ற நவீன வசதி சென்னை காவல் துறையினர் அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த வசதி வாயிலாக, பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை காவல் துறைக்கு தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து கிழக்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார் கூறியதாவது:
பொதுமக்கள் பாதுகாப்பிற்காக முதல் முறையாக மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும், 70 இடங்களில் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
யாரேனும் மயங்கி விழுந்தால் கூட, உடனடியாக அங்குள்ள பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உதவி செய்யப்படும். அதுமட்டுமின்றி தடைசெய்யப்பட்ட இடங்களுக்குள் வாகனங்கள் நுழைகிறது என்றால், உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி எச்சரிக்க முடியும். இதற்காக, ஆங்காங்கே ஒலிபெருக்கியும் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.