/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சதுர்வேதி சாமியார் மீது மீண்டும் வழக்கு சதுர்வேதி சாமியார் மீது மீண்டும் வழக்கு
சதுர்வேதி சாமியார் மீது மீண்டும் வழக்கு
சதுர்வேதி சாமியார் மீது மீண்டும் வழக்கு
சதுர்வேதி சாமியார் மீது மீண்டும் வழக்கு
ADDED : செப் 23, 2025 01:17 AM
சென்னை:சதுர்வேதி சாமியார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும் தலைமறைவாக இருப்பதால், அவர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை தி.நகர் பசுல்லா சாலையில், ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரஸ்ட், பாஷ்யகாரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற இரண்டு தொண்டு நிறுவனங்களை நடத்தியவர், வெங்கட சரவணன் என்ற பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி, 47. இவர், 'சதுர்வேதி சாமியார்' என, அழைக்கப்பட்டார்.
இவர், பாலியல் வன்முறை வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின், குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து, சதுர்வேதி சாமியார் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று உத்தரவிட்டது.
அதனால், சிறையில் இருந்து வெளியே வந்தார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்; 2016ல் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அதன்பின், ஜாமினில் வெளியே வந்த சதுர்வேதி சாமியார், மீண்டும் தலைமறைவானார். இதனால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டார்.
அவர், தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், பின்.என்.எஸ்., 209 சட்டப்பிரிவின் கீழ், சதுர்வேதி சாமியார் மீது, நீதிமன்ற அவதிமப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன் வாயிலாக அவருக்கு, மூன்றில் இருந்து ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.