/உள்ளூர் செய்திகள்/சென்னை/ துணை முதல்வர் உதயநிதி பெயரில் குண்டு மிரட்டல் துணை முதல்வர் உதயநிதி பெயரில் குண்டு மிரட்டல்
துணை முதல்வர் உதயநிதி பெயரில் குண்டு மிரட்டல்
துணை முதல்வர் உதயநிதி பெயரில் குண்டு மிரட்டல்
துணை முதல்வர் உதயநிதி பெயரில் குண்டு மிரட்டல்
ADDED : செப் 23, 2025 01:16 AM
சென்னை:தமிழக துணை முதல்வர் உதயநிதி பெயரில் இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம், ஜி.எஸ்.டி., அலுவலகம் மற்றும் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள பி.ஐ.பி., அலுவலகத்திற்கு, நேற்று அதிகாலை இ - மெயில் ஒன்று வந்தது.
அதில், தமிழக துணை முதல்வர் உதயநிதி மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பெயரில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மூன்று இடங்களிலும், மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில், எந்தவித வெடி பொருட்களும் கிடைக்காததால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, இ - மெயில் ஐ.டி.,யை யார் அனுப்பியது, எங்கிருந்து அனுப்பினர் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.