மதுக்கூடமாக மாறிய அங்கன்வாடி மையம்
மதுக்கூடமாக மாறிய அங்கன்வாடி மையம்
மதுக்கூடமாக மாறிய அங்கன்வாடி மையம்
ADDED : ஜூன் 11, 2025 12:57 AM

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, திரு.வி.நகர் தொகுதி, 73வது வார்டுக்குட்பட்ட, நாச்சாரம்மாள் தெருவில் உள்ள மாநகராட்சி பல்நோக்கு மைய கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் இந்த கட்டடத்தை புதிதாக கட்டி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்.
தற்போது இந்த கட்டடத்தின் பின்புறம், மதுக்கூடமாக மாறியுள்ளது. ரவுடிகள் சிலர், அங்கன்வாடி கட்டடத்தை இரவு நேரங்களில் மதுக்கூடமாக மாற்றி வைத்துள்ளனர். கட்டடத்தை சுற்றி காலி மதுபாட்டில்கள் சிதறிக்கிடக்கின்றன.
இதுகுறித்து பகுதிவாசிகள், காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ரோந்து பணியின் போது இப்பகுதிக்கு போலீசார் வந்து சென்றால், அங்கன்வாடி மைய கட்டடம் பாதுக்காக்கப்படும் என்றும், இல்லையேல், விரைவில் இந்த கட்டடம் டாஸ்மாக் மது கூடமாகிவிடும் என்றும், பகுதிவாசிகள் எச்சரித்துள்ளனர்.