/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 395 கிலோ குட்காவுடன் சைதையில் 3 பேர் கைது 395 கிலோ குட்காவுடன் சைதையில் 3 பேர் கைது
395 கிலோ குட்காவுடன் சைதையில் 3 பேர் கைது
395 கிலோ குட்காவுடன் சைதையில் 3 பேர் கைது
395 கிலோ குட்காவுடன் சைதையில் 3 பேர் கைது
ADDED : ஜூன் 11, 2025 12:57 AM
சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில், நேற்று முன்தினம் இரவு, சைதாப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை மடக்கி விசாரித்தனர்.
அதில் அவர், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பாலமுருகன், 30, என தெரிந்தது. அவர் வைத்திருந்த பையில், 10 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.
பாலமுருகன் அளித்த தகவலின்பேரில், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கிடங்கை ஆய்வு செய்தனர். அங்கும், புகையிலை மூட்டைகள் இருந்தன.
அங்கிருந்த ஆசிப்பேக், 33, ராஜேஷ் கண்ணன், 24, மற்றும் பாலமுருகன் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். குட்கா, ஹான்ஸ், கூலிப், விமல் உள்ளிட்ட, 395 கிலோ புகையிலை பொருட்கள், 1.80 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு பைக், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.