/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மோட்டார் வாயிலாக குடிநீர் திருட்டு வீடுவீடாக எச்சரிக்கை நோட்டீஸ் மோட்டார் வாயிலாக குடிநீர் திருட்டு வீடுவீடாக எச்சரிக்கை நோட்டீஸ்
மோட்டார் வாயிலாக குடிநீர் திருட்டு வீடுவீடாக எச்சரிக்கை நோட்டீஸ்
மோட்டார் வாயிலாக குடிநீர் திருட்டு வீடுவீடாக எச்சரிக்கை நோட்டீஸ்
மோட்டார் வாயிலாக குடிநீர் திருட்டு வீடுவீடாக எச்சரிக்கை நோட்டீஸ்
ADDED : ஜூன் 11, 2025 12:56 AM

சென்னை, சென்னை குடிநீர் வாரியம், குழாய் வழியாக வினியோகிக்கும் குடிநீரை, மோட்டார் பொருத்தி திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.
குறிப்பாக, தங்கும் விடுதிகள், உணவகங்கள், சில வீடுகளில் குடிநீர் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இதர குடியிருப்புவாசிகளுக்கு கிடைக்கவேண்டிய குடிநீர் கிடைப்பதில்லை.
இது தொடர்பாக, அதிரடி சோதனை நடத்தி, 150க்கும் மேற்பட்ட மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், 'மோட்டார் பொருத்தி குடிநீரை திருடக்கூடாது. திருடினால் என்ன தண்டனை' என, பொதுமக்களிடம் விழிப்புணர்வு நடத்த வாரியம் முடிவு செய்தது.
இதற்காக, வீடுவீடாக எச்சரிக்கை துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது.
அதில் கூறியிருப்பதாவது:
மின்மோட்டார் பொருத்தி குடிநீரை திருடுவது, சட்டபடி குற்றம். இத்தகையை குற்றத்தில் ஈடுபட்டால், குடிநீர் இணைப்பை துண்டித்து, அபராதம் விதிக்கப்படும். அதன்பின், 90 நாட்களுக்கு பிறகு, வணிக கட்டடங்களுக்கு, 20,000 ரூபாய், வீடுகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மறு இணைப்பு பெற 7,500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.