/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அம்பத்துார் ஜமாபந்தி 476 மனுக்கள் ஏற்பு அம்பத்துார் ஜமாபந்தி 476 மனுக்கள் ஏற்பு
அம்பத்துார் ஜமாபந்தி 476 மனுக்கள் ஏற்பு
அம்பத்துார் ஜமாபந்தி 476 மனுக்கள் ஏற்பு
அம்பத்துார் ஜமாபந்தி 476 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூன் 18, 2025 12:33 AM
அம்பத்தூர், அம்பத்துார் வட்டத்தில் ஜமாபந்தி முகாம், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் நேற்று, அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, பல்வேறு வகை சான்றிதழ்கள், பட்டா மாற்றம், உட்பிரிவு மாற்றம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மனு வழங்கப்பட்டது.
இதில், அம்பத்துார் குறுவட்டத்துக்கு உட்பட்ட, அம்பத்துார், அத்திப்பட்டு, மண்ணுார்பேட்டை, காக்கப்பள்ளம், முகப்பேர் மற்றும் பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், 476 மனுக்களை வழங்கினர். அவற்றை, கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே பெற்று கொண்டார்.
இரண்டாம் நாளான இன்று, ஒரகடம், மேனாம்பேடு, பட்டரைவாக்கம் மற்றும் கொரட்டூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, கொரட்டூர் குறுவட்டத்திற்கு ஜமாபந்தி முகாம் நடக்கிறது.