/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெட்ரோல் 'பங்க்' ஊழியர் அடித்து கொலை பெட்ரோல் 'பங்க்' ஊழியர் அடித்து கொலை
பெட்ரோல் 'பங்க்' ஊழியர் அடித்து கொலை
பெட்ரோல் 'பங்க்' ஊழியர் அடித்து கொலை
பெட்ரோல் 'பங்க்' ஊழியர் அடித்து கொலை
ADDED : ஜூன் 18, 2025 12:34 AM
ஆதம்பாக்கம், ராமநாதபுரம், புதுக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம், 45. இவர், ஆதம்பாக்கம், மூன்றாவது பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் 'பங்க்'கில் பணிபுரிகிறார்.
இவர், நேற்று காலை பெட்ரோல் பங்க் அருகே இறந்து கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் விழுந்து, தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என, முதலில் கூறப்பட்டது. இதையடுத்து, சாதாரண மரணமாக போலீசார் வழக்கு பதிந்து, உடலை உறவினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர் விசாரணையில், முத்துராமலிங்கத்திற்கும், அதே 'பங்க்'கில் காசாளராக பணிபுரியும் கவுதமன் என்பவருக்கும் இடையே, பெண் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பால் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது.
அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று ஏற்பட்ட தகராறில் முத்துராமலிங்கத்தை தலையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார், கவுதமனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.