1 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வரத்து
1 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வரத்து
1 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வரத்து
ADDED : ஜூன் 11, 2025 01:10 AM

ஊத்துக்கோட்டை, சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தது.
இதையடுத்து தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் மார்ச் 28 முதல் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு, வந்து கொண்டு இருந்தது. பின் காளஹஸ்தி அருகே, கால்வாய் பணி காரணமாக கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மே 24ல் மீண்டும் கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டு, சாய்கங்கை கால்வாய் வாயிலாக வந்து கொண்டு இருக்கிறது. நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டிற்கு, வினாடிக்கு, 293 கன அடி வீதம் கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது வரை 1 டி.எம்.சி., தமிழகத்திற்கு வந்துள்ளது.