Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சமஸ்கிருத கல்லுாரியில் ஐந்து நாள் உபன்யாசம்

சமஸ்கிருத கல்லுாரியில் ஐந்து நாள் உபன்யாசம்

சமஸ்கிருத கல்லுாரியில் ஐந்து நாள் உபன்யாசம்

சமஸ்கிருத கல்லுாரியில் ஐந்து நாள் உபன்யாசம்

ADDED : ஜூன் 11, 2025 01:10 AM


Google News
சென்னை,

மஹா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு, பாஷ்ய வகுப்புகள் எனும் உபன்யாச நிகழ்ச்சி ஐந்து நாட்கள் நடத்தப்படுகிறது.

சென்னை, மயிலாப்பூரில், சமஸ்கிருத கல்லுாரி இயங்கி வருகிறது. வேங்கடராமன் அறக்கட்டளை, திருப்பந்துறை பர்வதவர்த்தினி மகாலிங்க அய்யர் அறக்கட்டளை, பாகீரதீ சீதாராம அறக்கட்டளை ஆகியவை இணைந்து, காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த மஹா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவை நடத்துகின்றன.

இதனை முன்னிட்டு, நேற்று முதல் வரும் 14ம் தேதி வரை, சமஸ்கிருத கல்லுாரி வளாகத்தில், 'பிரம்மசூத்திரங்களின் அத்வைத பாவனை' எனும் தலைப்பில், வேத நுாலின் ஒரு பகுதி குறித்து, பாஷ்ய வகுப்புகள் உபன்யாசமாக நடத்தப்படுகின்றன. சமஸ்கிருத கல்லுாரியின் வேதாந்த பேராசிரியர் மகேஸ்வரன் நம்பூதிரி இந்த வகுப்புகளை நடத்துகிறார்.

***





      Our Apps Available On




      Dinamalar

      Follow us