/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பொது கனிமங்கள் வாகனங்களுக்கு இனி ஆன்லைன் கடவுச்சீட்டு பொது கனிமங்கள் வாகனங்களுக்கு இனி ஆன்லைன் கடவுச்சீட்டு
பொது கனிமங்கள் வாகனங்களுக்கு இனி ஆன்லைன் கடவுச்சீட்டு
பொது கனிமங்கள் வாகனங்களுக்கு இனி ஆன்லைன் கடவுச்சீட்டு
பொது கனிமங்கள் வாகனங்களுக்கு இனி ஆன்லைன் கடவுச்சீட்டு
ADDED : ஜூன் 11, 2025 01:11 AM
சென்னை, 'கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு, இன்று முதல் ஆன்லைனில் மட்டுமே 'இ- டிரான்சிட்' எனும் இடைகடவு சீட்டு வழங்கப்படும்' என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
சாதாரண வகை கற்கள், ஜல்லி மற்றும் செயற்கை மணல்களை கொண்டு செல்லுவதற்கு, சென்னை மாவட்டத்தில் டிரான்ஸிட் பாஸ் எனப்படும், 'இடைகடவு சீட்டு' வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, அரசின் வழிகாட்டுதல்படி, இன்று முதல் இடைகடவு சீட்டிற்கு, https://mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். நடைச்சீட்டு அடிப்படையில், 'இ - டிரான்சிட் பாஸ்' இணையதளத்திலேயே வழங்கப்படும்.
இதனால், ஏற்றி செல்லும் கனிமங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு, விற்பனையும் வெளிப்படையாக அமையும். எனவே, இ- டிரான்சிட் பாஸ் பெற, இணைதயளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.