/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விளையாட்டு மைதானம் கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் விளையாட்டு மைதானம் கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
விளையாட்டு மைதானம் கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
விளையாட்டு மைதானம் கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
விளையாட்டு மைதானம் கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 08, 2024 02:08 AM

திருவொற்றியூர்:
திருவொற்றியூர் 7வது வார்டு, இந்திரா நகர் - கரிமேடு பகுதியில், ரயில்வேக்கு சொந்தமான, 2 ஏக்கர் காலி நிலம் உள்ளது. இந்த இடத்தை, 50 ஆண்டுகளாக சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், சிறுவர்கள், கால்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளுதல், முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக, இப்பகுதி செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஐ.சி.எப்.,பில் இருந்து லாரியில் எடுத்து வரப்பட்ட குப்பை கழிவுகள், இந்த மைதானத்தில் ஆங்காங்கே கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு, இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'ரயில்வேக்கு சொந்தமான நிலம் பல ஏக்கர் உள்ள நிலையில், மைதானத்தை மூடும் செயலில் ரயில்வே நிர்வாகம் ஈடுபடுவதை ஏற்க முடியாது. உடனடியாக, குப்பையை அகற்றி பொது பயன்பாட்டிற்கு தர வேண்டும்' என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால், விளையாட்டு மைதானத்திற்கு வந்த இளைஞர்கள், 100க்கும் மேற்பட்டோர், இந்திரா நகர் சந்திப்பு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த, திருவொற்றியூர் போலீசார் சமரச பேச்சு நடத்தி, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.