/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆக்கிரமிப்பால் 10 அடியான சாலை மீட்டு தர கோரிக்கை ஆக்கிரமிப்பால் 10 அடியான சாலை மீட்டு தர கோரிக்கை
ஆக்கிரமிப்பால் 10 அடியான சாலை மீட்டு தர கோரிக்கை
ஆக்கிரமிப்பால் 10 அடியான சாலை மீட்டு தர கோரிக்கை
ஆக்கிரமிப்பால் 10 அடியான சாலை மீட்டு தர கோரிக்கை
ADDED : ஜூலை 08, 2024 02:10 AM

திருவொற்றியூர்'திருவொற்றியூர், சாத்துமா நகர் கிராம தெருவில், சாலையோர ஆக்கிரமிப்புகளால், 30 அடி சாலை, 10 அடியாக குறுகியுள்ளது. இதனால், பகுதிவாசிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 'ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை மீட்டு தர வேண்டும்' என, அப்பகுதிவாசிகள், தமிழக முதல்வர், மேயர், மண்டல குழு தலைவருக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
திருவொற்றியூர், சாத்துமா நகர் - கிராமத்தெருவில், ஒரு காலத்தில் பேருந்துகள் சென்று வந்தன. தற்போது, 30 அடியிருந்த சாலை, வெறும் 10 அடிக்கு குறுகி போயுள்ளது. இதனால், அத்தியாவசிய போக்குவரத்து கூட சிரமமாக உள்ளது.
குறிப்பாக, இடிந்த நிலையில் இருந்த அங்கன்வாடி மையத்தை சுற்றி, அதிகளவில் ஆக்கிரமிப்புகள் வளர்ந்து விட்டன. மையம் இடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிய கட்டடம் அங்கேயே கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதே இடத்தில், அங்கன்வாடி மையம் கட்டினால், போக்குவரத்து ஸ்தம்பிக்கும். எனவே, மாநகராட்சி கவனித்து, 30 அடி சாலையை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.