/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முத்துமாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் முத்துமாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
முத்துமாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
முத்துமாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
முத்துமாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 08, 2024 02:12 AM

தண்டையார்பேட்டை:தண்டையார்பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று கும்பாபிேஷகம் விழா நடந்தது.
இதை முன்னிட்டு, கடந்த 5ம் தேதி அம்மன் விக்ரஹம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 6ம் தேதி காலை கலசத்தில் புனித நீர் வைத்து முதல் கால பூஜைகள் செய்யப்பட்டன.
நேற்று 4ம் கால யாக பூஜை செய்து, பக்தர்கள் படை சூழ கோபுர கலசத்தில் பூஜைகள் செய்யப்பட்டன. பின் புனித நீரை ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு, வந்திருந்த பக்தர்களுக்கு கலச நீரை தெளித்தும் கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடந்தது.
இதை தொடர்ந்து உற்சவ மூர்த்தியான ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கலசநீரானது ஊற்றப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நுாற்றுக்கணக்கான பெண்கள் விரதமிருந்து பங்கேற்றனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிேஷக விழாவையொட்டி 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.