/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள் திருமங்கலத்தில் தொடர்கிறது அத்துமீறல் நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள் திருமங்கலத்தில் தொடர்கிறது அத்துமீறல்
நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள் திருமங்கலத்தில் தொடர்கிறது அத்துமீறல்
நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள் திருமங்கலத்தில் தொடர்கிறது அத்துமீறல்
நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள் திருமங்கலத்தில் தொடர்கிறது அத்துமீறல்
ADDED : ஜூலை 08, 2024 02:13 AM

திருமங்கலம்,:திருமங்கலம் பள்ளி சாலையில், பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டு திருமங்கலத்தில், பள்ளிச் சாலை உள்ளது. திருமங்கலம் காவல் நிலையம் அருகிலேயே உள்ள இந்த சாலையின் அருகில், இரண்டு தனியார் பள்ளிகள் உள்ளன.
இதனால், இப்பகுதியில் காலையும் மாலையும் பொதுவாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இந்நிலையில், பள்ளி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆங்காங்கே, நடைபாதைகளை ஆக்கிரமித்து சிறிய கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், அவ்வழியாக செல்வோர் கடும் அவதியடைகின்றனர். எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் கோதை ஜெயராமன், 63, என்பவர் கூறியதாவது:
பள்ளி சாலையில் நாளுக்கு நாள் சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரிக்கிறது. இதுகுறித்து, கடந்த சில மாதங்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில் சுட்டிக்காட்டிய பின், கண்துடைப்புக்கு நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன.
மீண்டும் தற்போது ஆக்கிரமிப்புகள் துவங்கியுள்ளன. சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் போலீசாருக்கு பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.
சென்னையில் ஆங்காங்கே, நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சியினர் அகற்றி வருகின்றனர். இந்த பகுதியிலும் உள்ள கடைகளை அகற்றி நடைபாதைகளில், 'நடைபாதை நடப்பதற்கே' என்ற அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.