Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'கொண்டை மாட்டி விட்டிருச்சே' ஆபீசர்ஸ்

'கொண்டை மாட்டி விட்டிருச்சே' ஆபீசர்ஸ்

'கொண்டை மாட்டி விட்டிருச்சே' ஆபீசர்ஸ்

'கொண்டை மாட்டி விட்டிருச்சே' ஆபீசர்ஸ்

ADDED : ஜூலை 08, 2024 02:06 AM


Google News
Latest Tamil News
திருவொற்றியூர்:திருவொற்றியூர் மண்டலம் 11வது வார்டு, எல்லையம்மன் கோவில் தெருவிற்கு, ஏற்கனவே ஒளிரும் தெரு பெயர் பலகை உள்ளது.

சமீபத்தில், எல்லையம்மன் கோவில் தெருவிற்கு, புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. பழைய பெயர் பலகை நல்ல நிலைமையில் இருக்கும் நிலையில், மீண்டும் புது பெயர் பலகை அமைக்கப்பட்டது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கை, போக்கிரி படத்தில் வரும் வடிவேலு காமெடி போல 'என்னதான் 'கெட் அப்'பை மாத்தினாலும், இந்த கொண்டை மாட்டி விட்டுருச்சே!' என்பது போல, புது பெயர் பலகை வைக்கும்போது, பழையது காட்டி கொடுத்துள்ளது.

சாதாரணமாக, ஒரு தெரு பெயர் பலகை வைப்பதற்கு, 20,000 முதல் 27,000 ரூபாய் வரை செலவாகிறது. தற்போது, கவுன்சிலர் பெயர், படிப்பு, பொறுப்பு உள்ளிட்டவை அடங்கிய பலகையும், பெயர் பலகையில் தனியே இடம் பெறுவதால், 30 - 35,000 ரூபாய் வரை செலவாகிறது.

'அதிகாரிகளின் மெத்தனத்தால், ஒரே தெருவிற்கு இரு பெயர் பலகைகள் வைக்கப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது' என, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துஉள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us