/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்ட்ரலில் ரயில் பயணியிடம் நகை திருடிய வாலிபர் கைது சென்ட்ரலில் ரயில் பயணியிடம் நகை திருடிய வாலிபர் கைது
சென்ட்ரலில் ரயில் பயணியிடம் நகை திருடிய வாலிபர் கைது
சென்ட்ரலில் ரயில் பயணியிடம் நகை திருடிய வாலிபர் கைது
சென்ட்ரலில் ரயில் பயணியிடம் நகை திருடிய வாலிபர் கைது
ADDED : ஜூன் 07, 2024 12:24 AM
சென்னை, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி வினீத் உபாத்யாய் - லியோனி ஸ்மித். இவர்கள், தமிழகத்தில் சுற்றுலாவை முடித்து, மீண்டும் ஜார்க்கண்ட் செல்ல, கடந்த 3ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலைய காத்திருப்போர் அறையில் ஓய்வெடுத்தனர்.
அப்போது, லியோனி ஸ்மித் வைத்திருந்த கைப்பை திருடுபோனது. இது குறித்த புகாரின்படி சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்தனர்.
'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளில், லியோனி ஸ்மித் அருகே அமர்ந்திருந்த ஒருவர், திடீரென எழுந்து செல்வது தெரிந்தது.
இந்நிலையில், அதே நபர், சென்ட்ரல் ரயில் நிலைய பயணியர் ஓய்வு இடத்திற்கு, கடந்த 5ம் தேதி இரவு வந்தார்.
திருட்டில் ஈடுபட்ட அந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
அந்த நபர், விருதுநகரைச் சேர்ந்த தாஸ், 44, என்பதும், லியோனி ஸ்மித்தின் கைப்பையை திருடிச் சென்றதையும் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 1 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.