/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வி.ஆர்., சென்னை மாலில் 'க்ளோ பை கீர்த்திலால்ஸ்' ஷோரூம் வி.ஆர்., சென்னை மாலில் 'க்ளோ பை கீர்த்திலால்ஸ்' ஷோரூம்
வி.ஆர்., சென்னை மாலில் 'க்ளோ பை கீர்த்திலால்ஸ்' ஷோரூம்
வி.ஆர்., சென்னை மாலில் 'க்ளோ பை கீர்த்திலால்ஸ்' ஷோரூம்
வி.ஆர்., சென்னை மாலில் 'க்ளோ பை கீர்த்திலால்ஸ்' ஷோரூம்
ADDED : ஜூன் 07, 2024 12:24 AM

சென்னை, சென்னை அண்ணா நகரில் உள்ள வி.ஆர்., சென்னை மாலில், 'க்ளோ பை கீர்த்திலால்ஸ்' ஷோரூம் துவக்கப்பட்டு உள்ளது. இதை, நடிகை மமிதா பைஜு துவக்கி வைத்தார்.
கீர்த்திலால்ஸ் குழுமத்தின் வணிக வியூக இயக்குனர் சூரஜ் சாந்தகுமார் கூறியதாவது:
எங்களின் புதிய ஷோரூமை, சென்னை மாநகரின் முக்கிய இடமான அண்ணா நகரில் துவக்குவதில் பெருமிதம் கொள்கிறோம். புதிய சந்தைகளை அடைவதிலும், வளர்ச்சி மற்றும் புதுமை குறித்த எங்களது யுக்தி ரீதியான பார்வையையும், இப்புதிய கிளை பிரதிபலிக்கிறது.
எண்ணற்ற வடிவங்களில், உலகத்தரம் வாய்ந்த வைர நகைகளை வழங்குகிறது. எங்களது மிகச்சிறப்பான ஆபரண கலெக் ஷன்களை அதிக வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டுமென்ற குறிக்கோளுடன், சென்னையில் 'க்ளோ பை கீர்த்திலால்ஸ்' ஷோரூமை துவக்கி இருக்கிறோம்.
ஆபரண தொழில் துறையில் முன்னணியில் உள்ள எங்களது இருப்பை, இது மேலும் வலுப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.