/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மளிகை, பெட்டிக்கடைகளில் மது விற்றவர்களுக்கு 'காப்பு' மளிகை, பெட்டிக்கடைகளில் மது விற்றவர்களுக்கு 'காப்பு'
மளிகை, பெட்டிக்கடைகளில் மது விற்றவர்களுக்கு 'காப்பு'
மளிகை, பெட்டிக்கடைகளில் மது விற்றவர்களுக்கு 'காப்பு'
மளிகை, பெட்டிக்கடைகளில் மது விற்றவர்களுக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 07, 2024 12:23 AM

செங்குன்றம், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக மளிகை, பெட்டிக்கடைகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்ற மூவர் கைதாகினர்.
ஆவடி சுற்றுவட்டாரங்களில் மளிகை, பெட்டிக்கடைகளில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவது குறித்து, நம் நாளிதழில், 3ம் தேதி செய்தி வெளியானது.
இதையடுத்து, ஆவடி கமிஷனரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு, சோதனை நடவடிக்கை போலீசாரால் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், செங்குன்றம் மதுவிலக்கு போலீசார், செங்குன்றம் அடுத்த லட்சுமிபுரம் பொத்துார் பிரதான சாலை, பெரியார் நகரில், மளிகை கடையில் மதுபானம் விற்ற மைக்கேல்ராஜ், 39, பழைய பம்மதுகுளம், பிள்ளையார் கோவில் தெருவில் பெட்டிக்கடைகளில் மதுபானம் விற்ற சேகர், 56, பாடியநல்லுார், பி.டி.மூர்த்தி நகர், கலைஞர் தெருவை சேர்ந்த முத்துவேல், 48, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களின் கடையில் பதுக்கி வைத்திருந்த, 49 குவாட்டர் மதுபாட்டில்களை கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு, 7,000 ரூபாய்.
அதே போல், செங்குன்றம் போலீசார் நடத்திய சோதனையில், வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்ற, கிராண்ட்லைன் ஊராட்சி, அண்ணா தெருவைச் சேர்ந்த ஜமுனா, 53, மற்றும் சென்றம்பாக்கம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சூரியகலா, 58, ஆகியோரிடமிருந்து, 12 குவாட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.