/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பஸ்சில் 10 சவரன் ஆட்டை கைவரிசை காட்டிய பெண் கைது பஸ்சில் 10 சவரன் ஆட்டை கைவரிசை காட்டிய பெண் கைது
பஸ்சில் 10 சவரன் ஆட்டை கைவரிசை காட்டிய பெண் கைது
பஸ்சில் 10 சவரன் ஆட்டை கைவரிசை காட்டிய பெண் கைது
பஸ்சில் 10 சவரன் ஆட்டை கைவரிசை காட்டிய பெண் கைது
ADDED : ஜூன் 03, 2024 01:45 AM
வண்ணாரப்பேட்டை:தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வி, 63. கடந்த மே 5ம் தேதி, மின்ட் பேருந்து நிலையத்தில் இருந்து, தடம் எண். '56' பேருந்தில் ஏறி, தண்டையார்பேட்டை - அகஸ்தியா பேருந்து நிறுத்தம் வரை சென்றார்.
அப்போது, மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை, நான்கு பேர் கொண்ட கும்பல் திருடிச் சென்றது. இது குறித்து செல்வி, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், திருட்டில் தொடர்புடைய ஆந்திராவைச் சேர்ந்த தெய்வானை, 30, என்பவரை, அன்றைய தினமே கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தலைமறைவானவர்களை தேடி வந்த நிலையில், இதில் தொடர்புடைய, திருவொற்றியூரைச் சேர்ந்த அகிலா என்ற அஞ்சலி, 34, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து, ஏழு சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தலைமறைவாக உள்ள கிருஷ்ணன், அமுதா உள்ளிட்டவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.