ADDED : ஜூன் 03, 2024 01:46 AM
பெரம்பூர்:ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவிலில், கடந்த மே 24ம் தேதி, மர்ம நபர்கள் மூவர் புகுந்து, உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் விசாரித்தனர்.
கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன், கோவிலில் கைவரிசை காட்டிய, வியாசர்பாடியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர், கவுதம்,19, ஆகிய மூவரை கைது செய்தனர்.
இதில், கவுதமை தவிர மற்ற இருவரை, இளம் சிறார் சிறையில் அடைத்தனர்.
இவர்களிடமிருந்து சிறிய தாலி பொட்டு, மோதிரம், மூக்குத்தி ஆகிய நகைகள், 10,000 ரூபாய், ஒரு ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.