/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முதியவரிடம் நுாதனமாக ரூ.1 லட்சம் 'அபேஸ்' முதியவரிடம் நுாதனமாக ரூ.1 லட்சம் 'அபேஸ்'
முதியவரிடம் நுாதனமாக ரூ.1 லட்சம் 'அபேஸ்'
முதியவரிடம் நுாதனமாக ரூ.1 லட்சம் 'அபேஸ்'
முதியவரிடம் நுாதனமாக ரூ.1 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜூன் 03, 2024 01:45 AM
கொடுங்கையூர்:மாதவரம், கோ ஆப்ரேட்டிவ் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 61; ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். நேற்று முன்தினம், கொடுங்கையூர் எத்திராஜ்சாமி சாலையிலுள்ள ஸ்டேட் வங்கியில் பணம் எடுக்கச் சென்றார்.
அங்கு, தன் வங்கி கணக்கில் இருந்து, 1 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து மஞ்சள் பையில் போட்டுக் கொண்டு, சைக்கிளில் வீடு திரும்பினார்.
பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே, 'மிக்சர்' தின்பண்டம் வாங்க, சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, சைக்கிளில் இருந்த, பணம் வைத்திருந்த மஞ்சள் பையை காணவில்லை.
பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், அந்த பையை எடுத்துச் சென்றதாக, அக்கம் பக்கத்தினர் கூறினர்.
இது குறித்து முதியவர்கிருஷ்ணமூர்த்தி, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, கைவரிசை காட்டிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.