ரயில்வே குட்டைகள் புனரமைக்கப்படுமா?
ரயில்வே குட்டைகள் புனரமைக்கப்படுமா?
ரயில்வே குட்டைகள் புனரமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 18, 2024 12:36 AM

திருவொற்றியூர்,
திருவொற்றியூரில், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி, அண்ணாமலை நகர் - அம்பேத்கர் நகர் வரை, குட்டை உள்ளது. அதே போல, எர்ணாவூர், நேதாஜி நகர், அன்னை சிவகாமி நகர், எண்ணுார் ஆகிய பகுதிகளில் குட்டைகள் உள்ளன.
இவற்றில் சில குட்டைகள், தன்னார்வ அமைப்புகளால் துார்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு மழைநீர் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அண்ணாமலை நகர் - அம்பேத்கர் நகர் வரையிலான குட்டை முழுதுமாக துார் வாரப்பட்டு கரைகள் அமைக்கப்பட வேண்டும். மழைநீர் உள்செல்வதற்கும், நிரம்பும் பட்சத்தில் உபரி நீர் வெளியேறுவதற்கும் வழி ஏற்படுத்த வேண்டும்.
இதுபோன்ற கட்டமைப்பை ஏற்படுத்தும் பட்சத்தில், சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வில் இருப்பதுடன், நிலத்தடி நீர் மாசு அடையாமல் பாதுகாக்க முடியும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, ரயில்வே பகுதிகளில் குட்டைகளை சீரமைத்து, மழைநீர் தேங்கும் நீராதாரங்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.