/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டூ - வீலரில் செல்வோரை விட்டு வைக்காத நாய்கள் டூ - வீலரில் செல்வோரை விட்டு வைக்காத நாய்கள்
டூ - வீலரில் செல்வோரை விட்டு வைக்காத நாய்கள்
டூ - வீலரில் செல்வோரை விட்டு வைக்காத நாய்கள்
டூ - வீலரில் செல்வோரை விட்டு வைக்காத நாய்கள்
ADDED : ஜூன் 18, 2024 12:35 AM

திருவொற்றியூர், 5வது வார்டு, விம்கோ நகர் பிரதான சாலை, சக்திபுரம், காந்தி நகர் பிரதான சாலை பகுதிகளில், தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.
சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை துரத்தி சென்று கடிக்கின்றன. குறிப்பாக, டூ - வீலரில் செல்வோரை கண்டமேனிக்கு குரைத்தபடி கும்பலாக துரத்தி செல்வதால், பதற்றமடைந்து அவர்கள் விபத்தில் சிக்கி காயமுறுகின்றனர். இதனால், பேப்பர் போடும் பசங்க, பால் பாக்கெட் போடுவோர் இப்பகுதியில் வர தயங்குகின்றனர்.
இது குறித்து, மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தாலும், எந்தவொரு பலனுமில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, தெருநாய்கள் பிரச்னை உரிய தீர்வு காண வேண்டும்.
- எஸ்.கிறிஸ்டி,
விம்கோ நகர், திருவொற்றியூர்.