/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வடமாநில போதை நபர்களால் பீதியில் ஐ.ஜே.புரம் வாசிகள் வடமாநில போதை நபர்களால் பீதியில் ஐ.ஜே.புரம் வாசிகள்
வடமாநில போதை நபர்களால் பீதியில் ஐ.ஜே.புரம் வாசிகள்
வடமாநில போதை நபர்களால் பீதியில் ஐ.ஜே.புரம் வாசிகள்
வடமாநில போதை நபர்களால் பீதியில் ஐ.ஜே.புரம் வாசிகள்
ADDED : ஜூன் 18, 2024 12:34 AM
மணலிபுதுநகர், மணலிபுதுநகர், ஐ.ஜே.புரம் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பின்புறம், சிட்கோ வளாகம் செயல்படுகிறது.
சிட்கோ வளாகத்தில், பீஹார், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே, ஐ.ஜே.புரம் - சிட்கோ வளாகம் இடையே உள்ள காலி மைதானத்தில், விடுமுறை தினங்களில் வடமாநில தொழிலாளர்கள், கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகின்றனர்.
குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில், மதுபாட்டில்களுடன் காலி மைதானங்களில் முகாமிடும் தொழிலாளர்கள், மது அருந்தி தள்ளாடியபடி செல்கின்றனர்.
இதனால், ஐ.ஜே.புரம் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து, காவல்துறையினருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவொரு பயனும் இல்லை.
இதன் காரணமாக, பெண்கள், குழந்தைகள் வெளியே நடமாட முடிவதில்லை என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் கவனித்து, பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.