ADDED : ஜூன் 18, 2024 12:36 AM
ஓட்டேரி, ஓட்டேரிக்கு உட்பட்ட பள்ளம் பகுதியில், கடந்த 8ம் தேதி மாலை, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அருள், 38, என்ற நபர் கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கினார்.
அவரது வீட்டை சோதனை செய்தபோது, 12 கிலோ கஞ்சா மற்றும் 17.29 லட்சம் ரூபாய் சிக்கியது. அருளை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
அவரது மனைவி கோட்டீஸ்வரி, 38, உள்ளிட்ட ஐந்து பேரை தேடிவந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ளோரை தேடி வருகின்றனர்.