/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மைசூரு பெண் பலாத்காரம் கோயம்பேடில் இருவர் கைது மைசூரு பெண் பலாத்காரம் கோயம்பேடில் இருவர் கைது
மைசூரு பெண் பலாத்காரம் கோயம்பேடில் இருவர் கைது
மைசூரு பெண் பலாத்காரம் கோயம்பேடில் இருவர் கைது
மைசூரு பெண் பலாத்காரம் கோயம்பேடில் இருவர் கைது
ADDED : ஜூலை 20, 2024 01:14 AM
கோயம்பேடு:மைசூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், நேற்று முன்தினம் இரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கோயம்பேடில் பேருந்துக்காக காத்திருந்த தன்னை மர்ம நபர்கள் ஆட்டோவில் கடத்தி, மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து, அறையில் அடைத்து வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் மொபைல் போன் டவரை ஆய்வு செய்த போது, மடிப்பாக்கத்தில் இருந்து அழைப்பு வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணை மீட்டு, அவரை கடத்தி வந்த வேலுாரைச் சேர்ந்த சதீஷ், 33, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சகிலா, 35, ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சகிலா, பாலியல் தொழில் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.