/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆடி மாத முதல் வெள்ளியில் பக்தி பரவசம் ஆடி மாத முதல் வெள்ளியில் பக்தி பரவசம்
ஆடி மாத முதல் வெள்ளியில் பக்தி பரவசம்
ஆடி மாத முதல் வெள்ளியில் பக்தி பரவசம்
ஆடி மாத முதல் வெள்ளியில் பக்தி பரவசம்
ADDED : ஜூலை 20, 2024 01:19 AM

அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி. இம்மாதத்தில், செல்லியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு பால்குடம் எடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்தாண்டு ஆடி முதல் வெள்ளியான நேற்று, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில், ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு, வழிபாடு நடத்தினர். கோவில்களில் விசேஷ அம்மன் பாட்டுகள் ஓயாது ஒலித்தன.
சென்னையின் முக்கிய கோவில்களான மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன், கோலவிழியம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், திருமுல்லைவாயில் பச்சையம்மன், பிராட்வே காளிகாம்பாள், மடிப்பாக்கம் பொன்னியம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
புற்றுக்கு பால் வார்த்தல், கூழ் வார்த்தல், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கலிட்டு குலவை போடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை, பக்தர்கள் நிறைவேற்றினர். சில இடங்களில், தீ சட்டி ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். எந்த பிரச்னை வந்தாலும் போற்றாத நாளில்லை தாயே உன்னை என, மனமுருகி வேண்டினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கச்சபேஸ்வரர் கோவிலில் சுமங்கலி மற்றும் கன்னி பெண்கள் நாக சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் துலுக்காணத்தம்மன், செம்பாக்கம் அழகாம்பிகை அம்மன் உள்ளிட்ட பல கோவில்களிலும், ஆடி மாத முதல் வெள்ளி விமரிசையாக கொண்டாப்பட்டது.