/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போலீசை கண்டதும் தப்பிய கொள்ளையன் கால் முறிந்தது போலீசை கண்டதும் தப்பிய கொள்ளையன் கால் முறிந்தது
போலீசை கண்டதும் தப்பிய கொள்ளையன் கால் முறிந்தது
போலீசை கண்டதும் தப்பிய கொள்ளையன் கால் முறிந்தது
போலீசை கண்டதும் தப்பிய கொள்ளையன் கால் முறிந்தது
ADDED : ஜூன் 03, 2024 01:53 AM
சூளைமேடு:போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன், பாலத்தில் இருந்து குதித்ததில் அவரது கால் முறிந்தது.
சூளைமேடு பகுதியில் கடந்த வாரம், மர்ம நபர்கள் இருவர், கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் மொபைல்போன் பறித்தனர்.
இது தொடர்பாக விசாரித்த சூளைமேடு போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், இரு நபர்கள் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது.
இதனால், போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்,32, என்பவரை கைது செய்தனர்.
அவரது கூட்டாளி கரண்குமாரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, அவ்வழியே வந்த கரண்குமார், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.
அப்போது, பாலத்தில் இருந்து குதித்த போது, கரண்குமாரின் கால் முறிந்தது. அவரை கைது செய்த போலீசார், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.