/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'பைக்'குகள் மோதல்: 'ஏசி' மெக்கானிக் பலி 'பைக்'குகள் மோதல்: 'ஏசி' மெக்கானிக் பலி
'பைக்'குகள் மோதல்: 'ஏசி' மெக்கானிக் பலி
'பைக்'குகள் மோதல்: 'ஏசி' மெக்கானிக் பலி
'பைக்'குகள் மோதல்: 'ஏசி' மெக்கானிக் பலி
ADDED : ஜூன் 03, 2024 01:54 AM
தேனாம்பேட்டை:இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 'ஏசி' மெக்கானிக் பலியானார்.
தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்,32; 'ஏசி' மெக்கானிக். இவர், நேற்று காலை அண்ணா அறிவாலயம் எதிரே உள்ள விஜயராகவா சாலையிலிருந்து, அண்ணா சாலைக்கு 'பைக்'கில் வந்தார்.
அப்போது நந்தனத்தில் இருந்து அண்ணா சாலையில், சசிகுமார்,32, என்பவரும் டூவீலரில் வந்தார். இவ்விரு வாகனங்களும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில், ராஜேஷ் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, ராஜேஷ் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சசிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.