/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எண்ணுார் முகத்துவார பயிற்றுச்சுவர் கட்டுமானம்... இறுதிக்கட்டம்! வெள்ள அபாயம், மணல் குவிவதை தடுக்க திட்டம் எண்ணுார் முகத்துவார பயிற்றுச்சுவர் கட்டுமானம்... இறுதிக்கட்டம்! வெள்ள அபாயம், மணல் குவிவதை தடுக்க திட்டம்
எண்ணுார் முகத்துவார பயிற்றுச்சுவர் கட்டுமானம்... இறுதிக்கட்டம்! வெள்ள அபாயம், மணல் குவிவதை தடுக்க திட்டம்
எண்ணுார் முகத்துவார பயிற்றுச்சுவர் கட்டுமானம்... இறுதிக்கட்டம்! வெள்ள அபாயம், மணல் குவிவதை தடுக்க திட்டம்
எண்ணுார் முகத்துவார பயிற்றுச்சுவர் கட்டுமானம்... இறுதிக்கட்டம்! வெள்ள அபாயம், மணல் குவிவதை தடுக்க திட்டம்
ADDED : ஜூலை 19, 2024 12:07 AM

எண்ணுார், எண்ணுார் முகத்துவாரப் பகுதியில், மணல் குவிவதை தடுக்க அமைக்கப்படும் பயிற்றுச்சுவருக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சென்னைக்கு நீராதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், புழல் ஏரி ஆகியவை முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில், உபரி நீர் கால்வாய்கள் வழியாக பகிங்ஹாம் கால்வாயில் பாய்ந்து, எண்ணுார் முகத்துவாரம் வழியாக, கடலில் கலப்பதற்கான வழித்தடம் உள்ளது.
1 லட்சம் கன அடி
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், 2015ல் கொட்டித்தீர்த்த கனமழையால், பூண்டி, புழல் நீர்த்தேக்கங்களில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மற்றும் பகிங்ஹாம் கால்வாயில் ஆர்ப்பரித்த வெள்ளம் என, ௧ லட்சம் கனஅடிக்கும் மேல், முகத்துவாரம் வழியாக கடலில் கலந்தது.
கடல் வாட்டம் காரணமாக வெள்ளநீர் உள்வாங்காததால், வடசென்னையின், திருவொற்றியூர், மணலி மண்டலங்கள் முழுதும் வெள்ளக்காடாக மாறி கடுமையாக பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, 2017, 2020, மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வடசென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதற்கு, உபரி கால்வாய்கள் சரியாக துார்வாரப்படாததே காரணம் என, குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக, முகத்துவாரத்தை துார்வாரி ஆழப்படுத்துவதுடன், இருபக்கமும் துாண்டில் வளைவு போன்ற அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
அதைத் தொடர்ந்து, எண்ணுார் காமராஜர் துறைமுகம் - சமூக மேம்பாட்டு நிதியின் கீழ், 135 கோடி ரூபாய் செலவில், துாண்டில் வளைவு போன்ற கட்டுமானம் மேற்கொள்ளும் பணிக்கான திட்டவரைவு மேற்கொள்ளப்பட்டது.
தரமற்ற கற்கள்
அதன்படி, கடந்தாண்டு மார்ச் 22ல், பூமி பூஜை போடப்பட்டு, பயிற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் துவங்கி மும்முரமாக நடக்கின்றன.
இதற்கிடையில், கட்டுமான பணிகளில் தரமற்ற கற்கள் கொண்டு பணிகள் மேற்கொள்வதாகவும், இதனால், ஒரு புயலுக்கு கூட, பயிற்றுச்சுவர் தாக்கு பிடிக்காது எனவும் மீனவர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முகத்துவார நடுப்பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, கைவிடப்பட்ட சிதிலமடைந்த மேம்பாலம் உள்ளது.
படகுகள், அலையில் சிக்கும் போது, இந்த மேம்பால துாண்களில் சிக்கி, சேதமாகின்றன. அவற்றை அகற்ற வேண்டும் என்றும், மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.