/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வடபழனி, குன்றத்துார், பூந்தமல்லி, எழும்பூர், கூடுவாஞ்சேரி நெரிசல் வழித்தடங்களில் போதிய பஸ்கள் இல்லாமல் அவதி மெட்ரோ பணிகளை கைகாட்டும் அதிகாரிகள் வடபழனி, குன்றத்துார், பூந்தமல்லி, எழும்பூர், கூடுவாஞ்சேரி நெரிசல் வழித்தடங்களில் போதிய பஸ்கள் இல்லாமல் அவதி மெட்ரோ பணிகளை கைகாட்டும் அதிகாரிகள்
வடபழனி, குன்றத்துார், பூந்தமல்லி, எழும்பூர், கூடுவாஞ்சேரி நெரிசல் வழித்தடங்களில் போதிய பஸ்கள் இல்லாமல் அவதி மெட்ரோ பணிகளை கைகாட்டும் அதிகாரிகள்
வடபழனி, குன்றத்துார், பூந்தமல்லி, எழும்பூர், கூடுவாஞ்சேரி நெரிசல் வழித்தடங்களில் போதிய பஸ்கள் இல்லாமல் அவதி மெட்ரோ பணிகளை கைகாட்டும் அதிகாரிகள்
வடபழனி, குன்றத்துார், பூந்தமல்லி, எழும்பூர், கூடுவாஞ்சேரி நெரிசல் வழித்தடங்களில் போதிய பஸ்கள் இல்லாமல் அவதி மெட்ரோ பணிகளை கைகாட்டும் அதிகாரிகள்
ADDED : ஜூலை 19, 2024 12:09 AM
சென்னை, சென்னையில் வடபழனி, குன்றத்துார், பூந்தமல்லி, எழும்பூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில், போதிய அளவில் பேருந்துகள் இயக்காததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
எம்.டி.சி., எனப்படும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும், 3000க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில், தினமும் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னையின் எல்லை நாளுக்குள் அதிகரித்து வருவதால், செங்கல்பட்டு, மகாபலிபுரம், திருவள்ளூர் என புறநகர் பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் பெருகி வரும் பயணியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, போதிய மாநகர பேருந்துகள் இயக்குவதில்லை.
குறிப்பாக, நெரிசல் மிக்க வடபழனி, குன்றத்துார், பூந்தமல்லி, எழும்பூர், கூடுவாஞ்சேரி வழித்தடங்களில் போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது.
பயணியர் நெரிசல் அதிகம் உள்ள 26, 88கே, 1ஏ, எம் 88, 578, 66எக்ஸ், இ18, 28, 2ஏ, 27டி, ஏ51, உள்ளிட்ட வழிதடங்களில் போதிய அளவில் பேருந்துகள் இயக்குவதில்லை. இதனால், பயணியர் 20 முதல் 40 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
சென்னையில் வடபழனி, குன்றத்துார், பூந்தமல்லி, எழும்பூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில் போதிய அளவில் பேருந்துகள் இயக்குவதில்லை. இதனால், பஸ்சுக்கு 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இரவு 8:30 மணிக்கு பிறகு, பஸ்களை குறைத்து இயக்குவதால், தாம்பரத்தில் இருந்து மண்ணிவாக்கம், வண்டலுார், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், திருவள்ளூர் செல்ல வேண்டிய பயணியர் அவதிப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகரில் மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நடப்பதால், முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, நெரிசலும் அதிகரித்துள்ளது. இதில், மாநகர பேருந்துகளும் சிக்கி விடுகின்றன.
இதனால், மாநகர பேருந்துகளை சரியான நேரத்தில் இயக்குவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. சில நேரங்களில் ஒரே நேரத்தில், ஒரே தடத்தில் இரண்டு பேருந்துகள் செல்வதற்கும் இது தான் காரணம்.
இருப்பினும், முடிந்த அளவுக்கு பேருந்துகளின் நேர அட்டவணையில் மாற்றம் செய்து, இயக்கி வருகிறோம். புது பேருந்துகள் வரும்போது, இயக்கமும் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.