ADDED : ஜூலை 03, 2024 12:24 AM
எம்.கே.பி.நகர்,
சென்னை வியாசர்பாடி, சர்மா நகர் எஸ்டேட் அருகில், எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவரது பையை சோதனையிட்டனர். அதில், போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியைச் சேர்ந்த கணேஷ், 31, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.