/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருவொற்றியூரில் திருவள்ளுவருக்கு கோவில் நலச்சங்கம், பாரதி பாசறை வரவேற்பு திருவொற்றியூரில் திருவள்ளுவருக்கு கோவில் நலச்சங்கம், பாரதி பாசறை வரவேற்பு
திருவொற்றியூரில் திருவள்ளுவருக்கு கோவில் நலச்சங்கம், பாரதி பாசறை வரவேற்பு
திருவொற்றியூரில் திருவள்ளுவருக்கு கோவில் நலச்சங்கம், பாரதி பாசறை வரவேற்பு
திருவொற்றியூரில் திருவள்ளுவருக்கு கோவில் நலச்சங்கம், பாரதி பாசறை வரவேற்பு
ADDED : ஜூலை 03, 2024 12:23 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், தேரடி, ஈசாணி மூர்த்தி கோவில் தெரு சந்திப்பில் திருவள்ளுவர் மற்றும் வாசுகி ஆகியோருக்கு தனிக்கோவில் இருந்துள்ளது.
பழமையான இக்கோவில், 20 ஆண்டுகளுக்கு முன் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. பின், சாலை விரிவாக்கத்தின் போது, முழுதுமாக கோவில் அகற்றப்பட்டு விட்டது.
வரலாற்று தொடர்புடைய கோவில் என்பதால், திருவள்ளுவருக்கான திருக்கோவிலை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என, திருவொற்றியூர் நலச்சங்கத்தினர், எம்.எல்.ஏ., -- எம்.பி., ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு, கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர்.
அதே போல், திருவொற்றியூர் பாரதி பாசறை அமைப்பினரும், தங்களது ஆண்டு குழுவில், தீர்மானங்கள் நிறைவேற்றி, திருவள்ளுவருக்கான கோவில் அமைக்க வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை, 2024 - 25ல், திருக்கோவில் மீட்டுருவாக்குதல் என்ற தலைப்பில், 81வது அறிவிப்பாக, சென்னை, திருவொற்றியூர், அருள்மிகு திருவள்ளுவர் கோவில், 90 லட்சம் மதிப்பீட்டில், கட்டப்படும் என, அறிவிப்பு வெளியானது.
இதற்கு, திருவொற்றியூர் நல சங்கம், பாரதி பாசறை மற்றும் திருவொற்றியூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
மகிழ்ச்சி
திருவள்ளுவர் கோவிலை கட்ட வேண்டும் என, திருவொற்றியூர் நலச்சங்கம் சார்பில், பல முயற்சிகள் மேற்கொண்டோம். அதன்படி, எம்.பி., - எம்.எல்.ஏ.,, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் திருவொற்றியூர் மண்டல குழு தலைவருக்கும், கோரிக்கை மனுவை, ஓராண்டிற்கு முன்னதாக வழங்கினோம். இந்நிலையில், மானிய கோரிக்கை அறிவிப்பில், 90 லட்சம் ரூபாய் செலவில், திருவள்ளுவருக்கு கோவில் அமைய உள்ளதாக, அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுப்பிரமணி, திருவொற்றியூர் நலச்சங்கம்.