/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாசி படர்ந்து காட்சியளிக்கும் சிங்கார நாயக்கர் தெரு குளம் பாசி படர்ந்து காட்சியளிக்கும் சிங்கார நாயக்கர் தெரு குளம்
பாசி படர்ந்து காட்சியளிக்கும் சிங்கார நாயக்கர் தெரு குளம்
பாசி படர்ந்து காட்சியளிக்கும் சிங்கார நாயக்கர் தெரு குளம்
பாசி படர்ந்து காட்சியளிக்கும் சிங்கார நாயக்கர் தெரு குளம்
ADDED : ஜூலை 08, 2024 01:50 AM

போரூர்:செட்டியார் அகரம் சிங்கார நாயக்கர் தெருவில் உள்ள குளம், பராமரிப்பின்றி பாசி படர்ந்து காட்சியளிக்கிறது.
வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட ஆலப்பாக்கம், ராமாபுரம் ஏரிகள் மற்றும் ஆவின் குளம், அகத்தீஸ்வரர் சிவன் கோவில் குளம், ஆஞ்சநேயர் கோவில் குளம், அப்பாதுரை பிள்ளை தெரு குளம், சிங்கார நாயக்கர் தெரு குளம் என, 13 குளங்களும், கடந்த 2020ம் ஆண்டு, 23.34 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டன.
இதில், போரூர் 150வது வார்டில் உள்ள செட்டியார் அகரம் சிங்கார நாயக்கர் தெருவில் உள்ள குளம், 22 லட்சம் ரூபாய் மதிப்பில் சீர் செய்யப்பட்டு, கரைகள் அமைக்கப்பட்டன.
தற்போது, இந்த குளம் முறையான பராமரிப்பின்றி, பாசி படர்ந்து காட்சியளிக்கிறது. இதனால், குளத்தில் தேங்கியுள்ள தண்ணீர் மாசடையும் நிலை உள்ளது.
எனவே, வரும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி வைக்கும் விதமாக, குளத்தை முறையாக துார் வாரி துாய்மைப்படுத்த வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.