/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின் இணைப்பு பெட்டியால் வேளச்சேரியில் அச்சம் வெள்ளம் தேங்கும் பகுதியில் அமைத்ததாக குற்றச்சாட்டு மின் இணைப்பு பெட்டியால் வேளச்சேரியில் அச்சம் வெள்ளம் தேங்கும் பகுதியில் அமைத்ததாக குற்றச்சாட்டு
மின் இணைப்பு பெட்டியால் வேளச்சேரியில் அச்சம் வெள்ளம் தேங்கும் பகுதியில் அமைத்ததாக குற்றச்சாட்டு
மின் இணைப்பு பெட்டியால் வேளச்சேரியில் அச்சம் வெள்ளம் தேங்கும் பகுதியில் அமைத்ததாக குற்றச்சாட்டு
மின் இணைப்பு பெட்டியால் வேளச்சேரியில் அச்சம் வெள்ளம் தேங்கும் பகுதியில் அமைத்ததாக குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 08, 2024 01:55 AM

வேளச்சேரி:வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலை, 2 கி.மீ., துாரம், 80 அடி அகலம் உடையது. இந்த சாலை, மூன்று ஆண்டுகளுக்கு முன் முழு பயன்பாட்டுக்கு வந்தது.
மடிப்பாக்கம், நங்கநல்லுார், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிமக்கள், திருவான்மியூர், அடையாறு, தரமணி பகுதிகளுக்கு துரித பயணமாக செல்ல, இந்த இருவழி சாலையை பயன்படுத்துகின்றனர்.
ஐ.ஐ.டி., வளாகம், தரமணி, வேளச்சேரியின் ஒரு பகுதியில் வடியும் மழைநீர், இந்த சாலையில் உள்ள, 100 அடி அகல ஆறு கல்வெர்ட்டு வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது.
இதனால், ஒவ்வொரு கனமழைக்கும், ரயில்வே சாலையில் 5 அடி உயரத்தில், 2, 3 நாள்கள் வரை மழைநீர் தேங்கி நிற்கும். சதுப்பு நிலத்தில் நீரோட்டம் குறைந்த பின், வடிய துவங்கும். இதனால், மழைக்காலங்களில் ரயில்வே சாலை, சுரங்கப்பாதை மூடப்படும்.
இந்த ரயில்வே சாலையில் 400 கி.வாட் திறன் உடைய கேபிள் பதிக்கும் பணி, ஆறு மாதங்களுக்கு முன் துவங்கியது. இந்த கேபிள், தரமணி துணை மின் நிலையத்தில் இருந்து, சித்தாலப்பாக்கம் வரை 20 கி.மீ., துாரத்தில் பதிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட துாரத்தில், மின்கேபிளை இணைக்கும் 'பில்லர் பாக்ஸ்' அமைக்கப்படுகிறது. ரயில்வே சாலையை ஒட்டி உள்ள, வடிகாலுக்குள் பில்லர் பாக்ஸ் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வடிகாலில், லேசான மழைக்கே வெள்ளம் அதிகமாக வடிந்து செல்லும். இதில், பில்லர் பாக்ஸ் அமைத்ததால், மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வேளச்சேரி பகுதி நலச்சங்கத்தினர் கூறியதாவது:
இங்கு புதைக்கப்பட்டுள்ள கேபிள் 400 கி.வாட் திறன் கொண்ட கேபிள் பதிக்கப்படுகிறது. மழையின்போது, மின்சாரம் பாய்ந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும்.
ஒவ்வொரு மழைக்கும் வெள்ளத்தில் மிதக்கிறோம். இதில், மின்சார பிரச்னை கூடுதல் அச்சத்தை கொடுக்கிறது.
வெள்ள பாதிப்பான பகுதியில் சாலையோரம் 6 அடி உயரத்தில் பில்லர் அமைத்து, அதில் மின்இணைப்பு பில்லர் பாக்ஸ் அமைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.