/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அ.தி.மு.க., வேட்பாளருக்கு 'ஷாக்' தந்த செங்கை அ.தி.மு.க., வேட்பாளருக்கு 'ஷாக்' தந்த செங்கை
அ.தி.மு.க., வேட்பாளருக்கு 'ஷாக்' தந்த செங்கை
அ.தி.மு.க., வேட்பாளருக்கு 'ஷாக்' தந்த செங்கை
அ.தி.மு.க., வேட்பாளருக்கு 'ஷாக்' தந்த செங்கை
ADDED : ஜூன் 05, 2024 12:32 AM

காஞ்சிபுரம், ஜூன் 5-
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று விறுவிறுப்பாக நடந்தது.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், 2019ல் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் செல்வத்துக்கு கைகொடுத்த செங்கல்பட்டு சட்டசபை தொகுதி, இம்முறையும் அவருக்கு கைகொடுத்து உள்ளது.
செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், அதிக ஓட்டுகள், செல்வத்துக்கு பதிவாகியுள்ளன.
அதேசமயம், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர் தோல்விக்கு முக்கிய காரணமாக, செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், மிக குறைவான எண்ணிக்கையிலான ஓட்டுகளே அவருக்கு பதிவாகியுள்ளது, அ.தி.மு.க.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், ஒவ்வொரு சுற்றுக்கும், 4,000 முதல் 5,000 ஓட்டுகள், தி.மு.க., வேட்பாளர் செல்வத்துக்கு கிடைத்து உள்ளது.
ஆனால், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகருக்கு, ஒவ்வொரு சுற்றிலும், 1,000 முதல் 2,000 ஓட்டுகள் மட்டுமே சராசரியாக கிடைத்துள்ளது.
செங்கல்பட்டில் எண்ணப்பட்ட, 31 சுற்றுகளில், 9 மற்றும்10 ஆகிய சுற்றுகளில், வெறும் 1,100 ஓட்டுகளே, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகருக்கு கிடைத்து உள்ளது.
பிற சட்டசபை தொகுதிகளில், 2,000 முதல் 3,000 ஓட்டுகள் அவருக்கு கிடைத்த நிலையில், செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில் மட்டும், மிக குறைவான எண்ணிக்கையிலேயே ராஜசேகருக்கு ஓட்டுகள் கிடைத்து உள்ளன.