வாலிபரிடம் வழிப்பறி: நால்வர் கைது
வாலிபரிடம் வழிப்பறி: நால்வர் கைது
வாலிபரிடம் வழிப்பறி: நால்வர் கைது
ADDED : ஜூலை 07, 2024 12:32 AM
வியாசர்பாடி, மணலி, பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் மோசஸ், 19. இவர் பெரியமேடு, மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள பாரம்பரிய அரிய வகை பழைய பொருட்கள் விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார். இவர், வியாசர்பாடி, நேரு நகர் 2வது தெருவில் உள்ள தன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு நின்றிருந்தபோது, அங்கு வந்த நால்வர் கும்பல் மோசஸை தாக்கி, 1,000 ரூபாய் பறித்து சென்றனர்.
வியாசர்பாடி போலீசாரின் விசாரணையில், வியாசர்பாடி, எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அரவிந்த், 19, முல்லை நகரைச் சேர்ந்த கிேஷார்குமார், 21, கென்னடி நகரைச் சேர்ந்த சந்தோஷ், 20, நேரு நகரைச் சேர்ந்த முஜித், 20, ஆகியோரை கைது செய்தனர்.