/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெண் ஊழியரை வெட்டி நகை பறித்த கும்பல் பெண் ஊழியரை வெட்டி நகை பறித்த கும்பல்
பெண் ஊழியரை வெட்டி நகை பறித்த கும்பல்
பெண் ஊழியரை வெட்டி நகை பறித்த கும்பல்
பெண் ஊழியரை வெட்டி நகை பறித்த கும்பல்
ADDED : ஜூலை 07, 2024 12:33 AM
விருகம்பாக்கம், கே.கே.நகர், கிழக்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் வனிதா, 39. இவர், சாலிகிராமம் போஸ்டல் ஆடிட் காலனியில் உள்ள 'வாட்டர் மானிடரிங் மீட்டர்' தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் பணிபுரிகிறார்.
இங்கு, நேற்று முன்தினம் காலை வந்த நான்கு பேர் கும்பல், நிறுவனத்தின் உரிமையாளருக்கு தெரிந்தவர்கள் போல வனிதாவிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
திடீரென அவர் கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி தரும்படி மிரட்டினர்.
அவர் மறுக்கவே, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, வனிதாவின் இடது கை தோள்பட்டையில் கத்தியை திருப்பி பிடித்து வெட்டினர்.
பீதியில் உறைந்த வனிதாவிடம், 4 கிராம் அளவிலான இரண்டு மோதிரங்கள் மற்றும் மடிக்கணினியை பறித்து சென்றனர். விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.