/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நாவல், மங்குஸ்தான் சீசன் கோயம்பேடிற்கு வரத்து அதிகரிப்பு நாவல், மங்குஸ்தான் சீசன் கோயம்பேடிற்கு வரத்து அதிகரிப்பு
நாவல், மங்குஸ்தான் சீசன் கோயம்பேடிற்கு வரத்து அதிகரிப்பு
நாவல், மங்குஸ்தான் சீசன் கோயம்பேடிற்கு வரத்து அதிகரிப்பு
நாவல், மங்குஸ்தான் சீசன் கோயம்பேடிற்கு வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 07, 2024 12:32 AM
சென்னை, தமிழகத்தின் சேலம், ஈரோடு, தர்மபுரி, பெரம்பலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலும் நாவல் பழங்கள் அதிகளவில் விளைகின்றன.
திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில், மங்குஸ்தான், ரம்புட்டான், பிளம்ஸ், செர்ரி, ஸ்டார் புரூட், லிச்சி, துரியன், தண்ணீர் பழம் உள்ளிட்ட பலவகை பழங்கள் விளைகின்றன.
தற்போது, நாவல் உட்பட மலைப்பிரதேசங்களில் விளையும் பழங்களின் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. இதனால், கோயம்பேடு சந்தைக்கு அவற்றின் வரத்து அதிகரித்துள்ளது. மார்க்கெட் வியாபாரிகள் மட்டுமின்றி சாலையோர மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள், அவற்றை வாங்கி சென்று அதிகளவில், விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். நடப்பாண்டு நாவல் பழ விளைச்சல் அதிகம் இருப்பதால், அவற்றின் விலை குறைந்துள்ளது.
கடந்தாண்டு 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நாவல் பழம், தற்போது 100 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேநேரம் மங்குஸ்தான் உள்ளிட்ட பழங்கள், கிலோ 200 முதல் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
விலை சற்று அதிகம் இருந்தாலும், சீசன் கால சத்துள்ள பழங்கள் என்பதால், அவற்றை பலரும் வாங்கி சுவைத்து வருகின்றனர்.