/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குடியிருப்பாகும் பிரசிடென்ட் ஹோட்டல்? தனியார் கட்டுமான நிறுவனம் ஆர்வம்! குடியிருப்பாகும் பிரசிடென்ட் ஹோட்டல்? தனியார் கட்டுமான நிறுவனம் ஆர்வம்!
குடியிருப்பாகும் பிரசிடென்ட் ஹோட்டல்? தனியார் கட்டுமான நிறுவனம் ஆர்வம்!
குடியிருப்பாகும் பிரசிடென்ட் ஹோட்டல்? தனியார் கட்டுமான நிறுவனம் ஆர்வம்!
குடியிருப்பாகும் பிரசிடென்ட் ஹோட்டல்? தனியார் கட்டுமான நிறுவனம் ஆர்வம்!
ADDED : ஜூன் 07, 2024 12:19 AM

சென்னை, மயிலாப்பூர், 'கிளாரியன் பிரசிடென்ட்' ஹோட்டல் வளாகம், அடுக்குமாடி குடியிருப்பாக மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் அடையாளச் சின்னங்களாக இருந்த நட்சத்திர ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருகின்றன.
இவற்றில், ஆழ்வார்பேட்டையில் 'அடையார் கேட்' ஹோட்டல் எனப்படும், 'கிரவுன் பிளாசா' நட்சத்திர ஹோட்டல், கடந்த ஆண்டு பாஷ்யம் கட்டுமான நிறுவனத்தால் வாங்கப்பட்டது.
இங்குள்ள நட்சத்திர ஹோட்டலை இடித்துவிட்டு, ஆடம்பர வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை பாஷ்யம் நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது.
இந்த வரிசையில், மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில், 40 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரிய அடையாள சின்னமாக பிரசிடென்ட் ஹோட்டல் இருந்து வருகிறது.
கடந்த 1978ல், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., இந்த ஹோட்டலை திறந்து வைத்தார்.
இதன் பின், அந்தந்த காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, 1979, 1980 ஆகிய ஆண்டுகளில் இந்த ஹோட்டல் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், 2011ல் பெரிய அளவில் இந்த ஹோட்டல் வளாகம் புதுப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த ஹோட்டல் கிளாரியன் குழுமத்தின் வரிசையில் ஒரு அங்கமாக சேர்ந்தது.
இதனால், கிளாரியன் பிரசிடென்ட் ஹோட்டல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஹோட்டல் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த ஆஸ்தா பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், இதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ளது. இதன் அடையாளமாக, ஹோட்டல் வாயிலில் ஆஸ்தா பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்தா நிறுவனம் சென்னை ஆழ்வார்பேட்டையில் ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில், ஆஸ்தா நிறுவனம் இங்கும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் தெரிவித்தனர்.