/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மச்சினிக்கு அவதுாறு 'மெசேஜ்' அனுப்பிய மாமாவுக்கு 'காப்பு' மச்சினிக்கு அவதுாறு 'மெசேஜ்' அனுப்பிய மாமாவுக்கு 'காப்பு'
மச்சினிக்கு அவதுாறு 'மெசேஜ்' அனுப்பிய மாமாவுக்கு 'காப்பு'
மச்சினிக்கு அவதுாறு 'மெசேஜ்' அனுப்பிய மாமாவுக்கு 'காப்பு'
மச்சினிக்கு அவதுாறு 'மெசேஜ்' அனுப்பிய மாமாவுக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 17, 2024 01:35 AM
திரு.வி.க., நகர்:திரு.வி.க., நகர், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 20. இவர், 'லேப் டெக்னீஷியன்' முடித்து, வேலை தேடி வருகிறார்.
இவரது அக்கா ஜெயசந்தியா என்பவருக்கு, கடந்தாண்டு யுவராஜ், 29, என்பவருடன் திருமணமான நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்கா கணவர் யுவராஜ், ஜெயஸ்ரீயின் மொபைல்போன் எண்ணுக்கு, ஜெயஸ்ரீ மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதுாறாக குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டி வந்துள்ளார்.
மேலும், இதுபோன்ற அவதுாறு குறுஞ்செய்திகளை, ஜெயஸ்ரீயின் தோழி கிருத்திகா என்பவரின் சமூக வலைதளங்களுக்கும் அனுப்பியுள்ளார்.
இது குறித்த புகாரின்படி விசாரித்த திரு.வி.க., நகர் போலீசார், உத்தண்டி, நயினார்குப்பத்தைச் சேர்ந்த யுவராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.