ADDED : ஜூன் 17, 2024 01:35 AM
பேசின் பாலம்:சூளை, டெமெல்லோஸ் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து பேசின் பாலம் போலீசார் விசாரித்தனர். அவர்களிடம், 180 மி.லி., அளவிலான 'லேபிள்' ஒட்டாத போலி மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இவர்கள் புளியந்தோப்பு, சிவராஜ்புரத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளிகளான சண்முகவேல், 47, மற்றும் துரைவேல், 43, என்பது தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.