ADDED : ஜூன் 17, 2024 01:34 AM
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, பொன்னன் தெருவைச் சேர்ந்தவர் மோகன், 62; ஆட்டோ ஓட்டுனர்.
இவர், குப்புசாமி என்பவரின் ஆட்டோவை, வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த 6ம் தேதி இரவு 8:00 மணி அளவில், கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, மோகன் சிறுநீர் கழிக்க, பெரம்பூர் நெடுஞ்சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, ஆட்டோவை காணவில்லை. இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரித்தனர். இதில், ஆட்டோவை திருடி சென்றது, மணலி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், 30, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.