ADDED : ஜூன் 02, 2024 12:35 AM
கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 29; ஆவடி தமிழ்நாடு காவல்துறை சிறப்பு காவல் படையில் காவலர்.
நேற்று அதிகாலை கும்மிடிப்பூண்டியில் உள்ள நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக,கே.டி.எம்., டியூக்' பைக்கில், சென்னை - கோல்கட்டா நெடுஞ்சாலையில் சென்றார்.
பொன்னேரி அடுத்த பஞ்செட்டி அருகே, கார்கள் லோடு ஏற்றப்பட்ட கனரக லாரி, ராஜ்குமாரின் பைக் பின்னால் மோதியது. பலத்த காயம் அடைந்து, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.