/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சுங்கச்சாவடி சந்திப்பில் பைக் மோதி முதியவர் பலி சுங்கச்சாவடி சந்திப்பில் பைக் மோதி முதியவர் பலி
சுங்கச்சாவடி சந்திப்பில் பைக் மோதி முதியவர் பலி
சுங்கச்சாவடி சந்திப்பில் பைக் மோதி முதியவர் பலி
சுங்கச்சாவடி சந்திப்பில் பைக் மோதி முதியவர் பலி
ADDED : ஜூன் 02, 2024 12:35 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர், சுங்கச்சாவடி சந்திப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா, 63. நேற்று மாலை, எண்ணுார் விரைவு சாலை - காலடிப்பேட்டை அருகே, சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, எண்ணுாரில் இருந்து ராயபுரம் நோக்கி சென்ற பைக் மோதியதில், சுப்பையாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பைக்கை ஓட்டி வந்த, எண்ணுார், திலகர் நகரைச் சேர்ந்த ரவீந்திரன், 22, என்பவரும் படுகாயமடைந்தார்.
தண்டையார்பேட்டை போக்குவரத்து போலீசார், காயமடைந்த வாலிபரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்த முதியவர் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதே பகுதியில், இரு மாதங்களுக்கு முன், பைக் மோதி இரு பெண்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.