போதிய பயணியர் இல்லை 2 விமானம் ரத்து
போதிய பயணியர் இல்லை 2 விமானம் ரத்து
போதிய பயணியர் இல்லை 2 விமானம் ரத்து
ADDED : ஜூன் 02, 2024 12:34 AM
சென்னை, டில்லியில் சில நாட்களாக, 126 டிகிரி வரை கோடை வெயில் தகிக்கிறது. இதையடுத்து, டில்லிக்கு பயணிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
டில்லில் இருந்து நேற்று மாலை 5:15 மணிக்கு புறப்பட்டு இரவு 8:05 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானமும், அதேபோல் சென்னையில் இருந்து இரவு 9:05 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12:00 மணிக்கு டில்லி சென்றடையும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானமும், நேற்று ரத்து செய்யப்பட்டன.
இந்த விமானங்களில் பயணிப்பதற்கு மிகக் குறைந்த அளவு பயணியர் மட்டுமே முன்பதிவு செய்து இருந்ததால், அந்தப் பயணியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டன.