/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாதியில் வடிகால் பணி பாதசாரிகள் அதிர்ச்சி பாதியில் வடிகால் பணி பாதசாரிகள் அதிர்ச்சி
பாதியில் வடிகால் பணி பாதசாரிகள் அதிர்ச்சி
பாதியில் வடிகால் பணி பாதசாரிகள் அதிர்ச்சி
பாதியில் வடிகால் பணி பாதசாரிகள் அதிர்ச்சி
ADDED : ஜூன் 24, 2024 02:26 AM

சென்னை:அண்ணா சாலை, எல்.ஐ.சி., அருகே மழைநீர் வடிகால் அரைகுறையாக விடப்பட்டுள்ளதால், அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையை, நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், எல்.ஐ.சி., அருகே மழைநீர் வடிகாலுடன் நடைபாதை அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர்.
பணிகள் முழுமையடையாமல் ஆங்காங்கே அரைகுறையாக கம்பிகள் நீட்டிக் கொண்டுள்ளன.
பாதசாரிகள் வேறு வழியின்றி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், விபத்து அபாயம் உள்ளது மழைநீர் வடிகால் பணியை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் கேட்டபோது, 'சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள மின் இணைப்பு பெட்டியை மாற்றி அமைத்து தர மின் வாரியத்திடம் கோரிஉள்ளோம்.
மாற்றியமைத்த பின் பணிகள் விரைந்து முடிக்கப்படும்' என்றார்.