/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இடிந்து விழுந்த கால்வாய் தடுப்பு சுவர் பல ஆண்டுகளாக கவனிக்காத அதிகாரிகள் இடிந்து விழுந்த கால்வாய் தடுப்பு சுவர் பல ஆண்டுகளாக கவனிக்காத அதிகாரிகள்
இடிந்து விழுந்த கால்வாய் தடுப்பு சுவர் பல ஆண்டுகளாக கவனிக்காத அதிகாரிகள்
இடிந்து விழுந்த கால்வாய் தடுப்பு சுவர் பல ஆண்டுகளாக கவனிக்காத அதிகாரிகள்
இடிந்து விழுந்த கால்வாய் தடுப்பு சுவர் பல ஆண்டுகளாக கவனிக்காத அதிகாரிகள்
ADDED : ஜூன் 24, 2024 02:27 AM

அரும்பாக்கம்:பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும், விருகம்பாக்கம் கால்வாய் இணைப்பு பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட, 106வது வார்டில், சூளைமேடு அருகில் விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது. நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய் அரும்பாக்கம், சூளைமேடு வழியாக, அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.
மொத்தம் 4 கி.மீ., துாரம் உடைய இக்கால்வாயை, மாநகராட்சி முறையாக பராமரிக்கவில்லை.
குறிப்பாக, கால்வாய் முழுதும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன.
அதேபோல், சூளைமேடு கண்ணகி தெருவில் இருந்து, எம்.எம்.டி.ஏ., காலனிக்கு செல்லும் பாதையில், இருசக்கர வாகனம் மட்டும் செல்லும் அளவில், இணைப்பு பாலம் உள்ளது.
இங்கிருந்து, எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இணைப்பு பாலத்தின் சுவர், பல ஆண்டுகளாகவே சேதமடைந்து, விபத்து அபாயத்தில் உள்ளது.
குறிப்பாக, ஒரு பக்கத்தின் சுவரில் பெரிய அளவில் ஓட்டை ஏற்பட்டு, முழுதும் உடைந்து சாய்ந்துள்ளது. இதுகுறித்து நம் நாளிதழில் பலமுறை சுட்டிக் காட்டியும், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
இந்நிலையில் தற்போது, நுழைவாயில் தடுப்புச்சுவர் இடிந்து கீழே விழுந்து, உயிர் பலி ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
சூளைமேடில் மிகவும் பழமை வாய்ந்த விருகம்பாக்கம் கால்வாய் செல்லும் வழியில், இந்த இணைப்பு பாலம் உள்ளது. ஆட்டோ செல்லும் அளவிற்கு பாலத்தின் வழி உள்ளதால், இதை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.
இணைப்பு பாலத்தின் சுவர் பல ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளது.
இதனால், பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்லும் போதும், மக்கள் நடந்து செல்லும் போதும், எப்போது வேண்டுமானாலும் சுவர் இடிந்து விழுந்து, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது, தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. உயிர் பலி ஏற்பட்ட பின், அரசு நடவடிக்கை எடுக்கலாம் என, அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
இங்கு விபத்து ஏற்பட்டதால், மாநகராட்சி அதிகாரிகள் தான் பொறுப்பு. உயிர்பலி ஏற்படும் முன், மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த சுவரை அகற்றி, புதிய சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பாதையை மூட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.