/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாயமான குழந்தைகள் நெமிலியில் தாயுடன் மீட்புமாயமான குழந்தைகள் நெமிலியில் தாயுடன் மீட்பு
மாயமான குழந்தைகள் நெமிலியில் தாயுடன் மீட்பு
மாயமான குழந்தைகள் நெமிலியில் தாயுடன் மீட்பு
மாயமான குழந்தைகள் நெமிலியில் தாயுடன் மீட்பு
ADDED : ஜூலை 10, 2024 12:38 AM

நெமிலி, செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வேலன், 31; ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு ஆர்த்தி, 30, என்பவருடன் திருமணமாகி, 11 வயதில் ஒரு மகள், 7 வயதில் ஒரு மகன் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதி ஓராண்டாக பிரிந்து வாழ்கின்றனர். தந்தையின் பராமரிப்பில் இரு குழந்தைகளும், ஒழலுார் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற குழந்தைகளை, மதிய உணவு இடைவேளையின் போது, மர்ம நபர்கள் கடத்தி சென்றதாக வேலன் புகார் அளித்தார். இதன்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் தனிப்படை அமைத்து, குழந்தைகளை தேடினர்.
இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி போலீசாரின் உதவியுடன், நெமிலி புன்னை கிராமத்தில் குழந்தைகளை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து நெமிலி போலீசார் கூறியதாவது:
ஆர்த்திக்கும், வெம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ், 35, என்ற தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனருக்கும், ஆறு மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நெமிலி-புன்னை பகுதியில், இரு தினங்களுக்கு முன், தனி வீடு எடுத்துள்ளனர். குழந்தைகள் தன்னுடன் இருக்க வேண்டும் என, பள்ளிக்கு சென்று ஆர்த்தி அழைத்து வந்துள்ளார்; அவர்களை மீட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரக்கோணம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஒப்படைத்த பின், நான்கு பேரையும் செங்கல்பட்டுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், இரு குழந்தைகளையும் வேலன், ஆர்த்தி இருவரும் உரிமை கொண்டாடுவதால், மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தைகள், தந்தையுடன் செல்ல சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குழந்தைகளை கடத்தி செல்ல உதவிய ஆர்த்தியின் நண்பர்களான கோகுல், 33, சரவணன், 34, ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.